தேசிய செய்திகள்

‘பொருளாதாரத்தில் எழுச்சி பெறுவோம்’ - தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை + "||" + We will rise in the economy - Chief Economic Advisor Confidence

‘பொருளாதாரத்தில் எழுச்சி பெறுவோம்’ - தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை

‘பொருளாதாரத்தில் எழுச்சி பெறுவோம்’ - தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை
மந்தநிலை நீங்கி விட்டதாகவும், பொருளாதாரத்தில் எழுச்சி பெறுவோம் என்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

2019-20-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை தயாரித்து வழங்கிய தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறுகையில், ‘நாட்டின் வணிக சுழற்சி நிகழ்வுகளை நீங்கள் உற்று நோக்கினால், அதன் ஏற்ற இறக்கங்களை கவனிக்க முடியும். தற்போதைய நிலையில் நாம் அந்த வீழ்ச்சியை முறியடித்து விட்டோம். எனவே இனிமேல் ஏற்றமே காணப்படும். அதையே நாங்கள் பட்ஜெட் போட்டிருக்கிறோம்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மந்தநிலை நீங்கி விட்டது எனவும், விரைவில் எழுச்சி பெறுவோம் எனவும் கூறிய சுப்பிரமணியன், அடுத்த 2020-21-ம் நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 6 முதல 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6 -6.5 சதவீதமாக உயரும் -பொருளாதார ஆய்வறிக்கை
அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயரும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
2. சில்லறை பணவீக்கம் 7.35% உயர்ந்து உள்ளது -பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது
6 ஆண்டுகள் இல்லாத அளவு சில்லறை பணவீக்கம் 7.35% ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது.
3. பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும்: அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும் என்றும், அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
4. 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு
2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.