தேசிய செய்திகள்

ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு புத்துயிர் பெற்றது + "||" + The Aircel-Maxis case against P Chidambaram and his son Karthi has been revived

ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு புத்துயிர் பெற்றது

ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு புத்துயிர் பெற்றது
ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றது
புதுடெல்லி,

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கை விசாரித்துவந்த கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் ஒவ்வொரு முறையும் ஒத்திவைக்கக் கோரியதால் நீதிபதி இப்படி ஒத்திவைத்தார்.


இந்நிலையில் இந்த வழக்கை கடந்த 28-ந்தேதி மீண்டும் மாவட்ட கோர்ட்டு தாமாக விசாரணையை தொடங்கி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்கு 2 வாரம் அவகாசம் கேட்டதையும் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. மாவட்ட நீதிபதி சுஜாதா கோலி கூறும்போது, “குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பார்க்கும்போது இது மிகவும் தீவிரமானதாக தெரிகிறது. இதனை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது நீதித்துறைக்கு உகந்ததல்ல” என்றார்.

இந்த வழக்குக்கு கோர்ட்டு மீண்டும் புத்துயிரூட்டி இருப்பதால் ப.சிதம்பரத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது
செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம்: பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் இந்தியா விவாதிக்க கூட மறுக்கிறது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.
2. விலைவாசி உயர்வு பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் - ப.சிதம்பரம் பேட்டி
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பிரச்சினையை எழுப்புவோம். மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டு வியூகம் வகுக்கப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
3. மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ராஜினாமா மோடி அரசு தோல்வி அடைந்ததின் ஒப்புதல் வாக்குமூலம் ப.சிதம்பரம் கருத்து.
4. ரபேல் விவகாரத்தில் மர்மம் இல்லை என்றால் வெளிப்படையாக ஏன் கூறக்கூடாது? ப.சிதம்பரம் கேள்வி
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
5. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை: ப.சிதம்பரம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-