தேசிய செய்திகள்

முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை + "||" + Federal government imposes a ban on export of masks

முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை

முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை
முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,

சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவுவதால், முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு சீன நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனங்களை நாடின.

மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியாளர்கள், பெரும்பாலும் முகக்கவசங்களை அதிகமாக தயாரிப்பது கிடையாது. தேவையை பொறுத்தே தயாரிக்கப்படுகிறது. சீனாவில் தேவை அதிகரிக்கவும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து அனைத்து வகையான முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அதிரடி தடை விதித்து உள்ளது.


வெளிநாடு வர்த்தக இயக்குனர் ஜெனரல் (டிஜிஎப்டி) அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காற்றில் பரவும் நுண்கிருமிகளிலிருந்து மக்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் (என் 95 முகக்கவசம் உள்பட), உடல் முழுவதும் மூடும் வகையிலான ஆடைகள் மற்றும் அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த உத்தரவு, அடுத்தகட்ட உத்தரவு வரும்வரையில் அமலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்நாட்டிலும் தேவை அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2. காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் ஜூன் 30 வரை செல்லும்: மத்திய அரசு அறிவிப்பு
பிப்.1 ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. கொரோனா பரவும் ஆபத்து: தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனா வேகமாக பரவும் ஆபத்து இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
5. கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை; ரூ.1¾ லட்சம் கோடி நிவாரண உதவிகள் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளார். மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.