தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்ககோரும் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + Petition to dismiss Mamata Banerjee as first-minister: Supreme Court order

முதல்-மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்ககோரும் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முதல்-மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்ககோரும் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முதல்-மந்திரி பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்ககோரும் மனுவினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார். அவர் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் எடுத்த பதவி பிரமாணத்துக்கு எதிராகவும் தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையிலும் கருத்து தெரிவித்து வருகிறார். எனவே அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது.


விசாரணை தொடங்கியதும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி இது சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க உகந்தது அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய அரசு போதிய உதவியை அளிக்க மறுப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
2. மே.வங்காளத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே ; மம்தா பானர்ஜி
மே.வங்காளத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
3. “எதற்காக நமது நாட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள்?” - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி
இந்தியா வளமான கலாசாரம், பாரம்பரியம் கொண்ட நாடாக இருக்கிறபோது, எதற்காக பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
4. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு: மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் பேரணி
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்று வருகிறது.
5. அபிஜித்துக்கு நோபல் பரிசு, கங்குலிக்கு பி.சி.சி.ஐ. பதவி கிடைத்தது மேற்கு வங்காளத்திற்கு பெருமை; மம்தா பானர்ஜி
அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசும், சவுரவ் கங்குலிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் பதவியும் கிடைத்துள்ளது மேற்கு வங்காளத்திற்கு பெருமை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.