தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட தடை: டெல்லி கோர்ட்டு பரபரப்பு உத்தரவு + "||" + Nirpaya case prohibited criminals hanged today: Delhi Court-wide order

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட தடை: டெல்லி கோர்ட்டு பரபரப்பு உத்தரவு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட தடை: டெல்லி கோர்ட்டு பரபரப்பு உத்தரவு
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளையும் இன்று தூக்கில் இடுவதற்கு டெல்லி கோர்ட்டு தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி,

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டும் இதனை உறுதி செய்தது.


குற்றவாளிகள் 4 பேரையும் ஜனவரி 22-ந்தேதி தூக்கில்போட வேண்டும் என்று கடந்த 7-ந்தேதி டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. முகேஷ்குமார் சிங் கருணை மனுவை கடந்த 17-ந்தேதி ஜனாதிபதி நிராகரித்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் டெல்லி கோர்ட்டு 4 பேரையும் பிப்ரவரி 1-ந்தேதி (இன்று) தூக்கில்போட வேண்டும் என்று 2-வது மரண வாரண்டு பிறப்பித்தது.

4 பேரையும் தூக்கில் போடுவதற்கான பணிகள் திகார் ஜெயிலில் கடந்த ஒரு வாரமாக முழுவேகத்துடன் நடைபெற்று வந்தது. திகார் ஜெயிலில் தூக்கு போடும் ஊழியர் இல்லாததால் உத்தரபிரதேச மாநிலம் மீரட் ஜெயிலில் பணிபுரியும் ஊழியர் பவன்ஜலந்த் என்பவர் இதற்காக திகார் ஜெயிலுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் 4 குற்றவாளிகளில் அக்‌ஷய்குமார் சிங், பவன்குப்தா ஆகியோர் தரப்பில் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “நாங்கள் இருவரும் சட்டம் அனுமதித்துள்ள சலுகைகளை இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை. எங்கள் தரப்பில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. வினய்குமார் சர்மா ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே மரண வாரண்டை ரத்துசெய்து, 1-ந்தேதி (அதாவது இன்று) எங்களை தூக்கிலிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி, இந்த மனு தொடர்பாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு திகார் ஜெயில் சூப்பிரண்டுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர் நேற்று காலை கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனைத்தொடர்ந்து மேலும் விரிவாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, குற்றவாளிகள் முகேஷ்குமார் சிங், பவன்குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை இவர்களை தூக்கிலிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் 4 பேருக்கும் இன்று (சனிக்கிழமை) நிறைவேற்ற இருந்த தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முகேஷ்குமார் சிங்கின் கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டது. வினய்குமார் சர்மாவின் கருணை மனு மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அக்‌ஷய்குமார் சிங், பவன்குப்தா ஆகியோர் இதுவரை கருணை மனு தாக்கல் செய்யவில்லை.

இதற்கிடையில் குற்றம் நடைபெற்றபோது தான் சிறுவன் என்பதால் தன்னை தூக்கில்போட தடை விதிக்க வேண்டும் என்று பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை கடந்த 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து பவன்குமார் குப்தா தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்றே நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் விசாரித்து தள்ளுபடி செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்’ - பொதுமக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது - பிரதமர் மோடி
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
3. நிர்பயா வழக்கு - குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
4. நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி குற்றவாளிகள் அளித்த மனு தள்ளுபடி
தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி நிர்பயா குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
5. நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு இல்லை
நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று நிறைவேற்றப்படுவதாக இருந்த தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.