உலக செய்திகள்

பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் விடுதலை + "||" + Pakistan to release the boys in the temple 4 of tampering

பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் விடுதலை

பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் விடுதலை
பாகிஸ்தானில் கோவிலை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
லாகூர்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்பர்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலின் சிலைகள், கடந்த 26 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக பிரேம் குமார் என்பவர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், கோவிலை சேதப்படுத்தியதற்காக 12 முதல் 15 வயதுடைய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் இது குறித்து பலர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை சேதப்படுத்தியதையும், அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இந்த விசாரணையின் போது புகார் அளித்த பிரேம் குமார், சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சிறுவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேம் குமார், “உள்ளூர் இந்து பஞ்சாயத்து தலைவர்களின் வேண்டுகோளின்படி நல்லெண்ண அடிப்படையில் சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டது” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
2. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.
3. கொரோனா பாதிப்பு : இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது- இம்ரான் கான்
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 தொழிலாளர்கள் சாவு
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.