தேசிய செய்திகள்

14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் + "||" + Earthquake 3 times in Gujarat in 14 hours

14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம்

14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம்
14 மணி நேர இடைவெளியில் குஜராத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 14 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7.24 மணிக்கு கட்ச் மாவட்டம் ராபர் பகுதியில் லேசாக ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது.


இந்த நிலையில் நேற்று காலை 8.35 மணி அளவில் கட்ச் மாவட்டம் பாசு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியது. அதே மாவட்டத்தில் பிலா என்ற இடத்தில் காலை 9.7 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகியது.

14 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 3 முறை நிகழ்ந்த இந்த லேசான நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் குஜராத் வருகை: முதல்-மந்திரி தகவல்
டிரம்ப் குஜராத் வர உள்ளதாக முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
2. குஜராத்தில் நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது
பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டது.
3. ‘மஹா’ புயல் வலுவிழந்தது: குஜராத்துக்கு ஆபத்து நீங்கியது
மஹா புயல் வலுவிழந்துள்ளதால் குஜராத்துக்கு வந்த ஆபத்து நீங்கியுள்ளது.
4. நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்
தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.
5. திசை மாறுகிறது: ‘மஹா’ புயல் 6-ந் தேதி குஜராத்தை தாக்குகிறது
குஜராத் மாநிலத்தை வருகிற 6-ந் தேதி ‘மஹா’ புயல் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.