தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி - ராகுல் காந்தி + "||" + Central government's failure to create employment - Rahul Gandhi

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி - ராகுல் காந்தி

வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி - ராகுல் காந்தி
இளைஞர்களுக்கு வேவைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் வேலைவாய்ப்புகள் குறித்த பெரிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.


இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, தனது டுவிட்டரில், “ எனது கேள்விகளை கண்டு நிதி-மந்திரி பயப்படவேண்டாம். நாட்டின் இளைஞர்கள் சார்பாக நான் கேள்விகளை கேட்டுள்ளேன். இதற்கு பதிலளிப்பது உங்கள் பொறுப்பு. நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது அவசியம். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை. இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வேண்டும், ஆனால் அதில், உங்கள் அரசு மோசமாக தோல்வி அடைந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2. காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் ஜூன் 30 வரை செல்லும்: மத்திய அரசு அறிவிப்பு
பிப்.1 ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. கொரோனா பரவும் ஆபத்து: தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனா வேகமாக பரவும் ஆபத்து இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
4. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
5. கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை; ரூ.1¾ லட்சம் கோடி நிவாரண உதவிகள் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளார். மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.