தேசிய செய்திகள்

ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சுதந்திர போராட்டம்: மகாத்மா காந்தி குறித்து கர்நாடக எம்.பி. சர்ச்சை பேச்சு + "||" + The Freedom Struggle with the British: Karnataka MP on Mahatma Gandhi Controversy Talk

ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சுதந்திர போராட்டம்: மகாத்மா காந்தி குறித்து கர்நாடக எம்.பி. சர்ச்சை பேச்சு

ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சுதந்திர போராட்டம்: மகாத்மா காந்தி குறித்து கர்நாடக எம்.பி. சர்ச்சை பேச்சு
கர்நாடக மாநில எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே, நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தேசத்தந்தை மகாத்மா காந்தியை மறைமுகமாக குறைகூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,

பெங்களூருவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அனந்த குமார் ஹெக்டே பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் மூன்று வகையான குழுக்கள் இருந்தன. ஒரு குழுவினர் புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் ஆயுதங்களை கையில் எடுத்து போராடினர். மற்றொரு குழுவினர் சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு போராடினர். கடைசியில் இன்னொரு குழுவினர் உள்ளனர். அவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டு போராடினர்.


இந்த குழுவினர் நேர்மையான முறையில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களிடம் அடி-உதை வாங்கவில்லை. ஆனால் அவர்கள் வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நமது நாட்டின் சுதந்திர போராட்டக்காரர்கள். பெங்களூரு இந்துத்துவா தலைநகராக மாற வேண்டும். இந்த உலகையே இந்துத்துவாவாக மாற்ற வேண்டும். சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்கள் தான் இந்துத்துவாவை எதிர்க்கிறார்கள். வரலாறு தெரியாத முட்டாள்கள் இந்த நாட்டில் உள்ளனர் என்று அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் கைல் ஜாமிசன், டேவோன் கான்வே ஆகியோருக்கு இடம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் கைல் ஜாமிசன், டேவோன் கான்வே ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
2. தலீபான்களுடனான ஒப்பந்தம்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது
தலீபான்களுடனான ஒப்பந்தப்படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது.
3. மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடா? - டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை விடுத்துள்ளது.