தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலின் சவாலுக்குத் தயார் - அமித் ஷா + "||" + Amit Shah Accepts Kejriwal's Debate Challenge, Reveals Who BJP's 'Chief Minister' Is

கெஜ்ரிவாலின் சவாலுக்குத் தயார் - அமித் ஷா

கெஜ்ரிவாலின் சவாலுக்குத் தயார் - அமித் ஷா
அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான் தயார் என்றும், நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,   

டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.


இந்த சூழலில் பா.ஜ.க.வினருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரிமான அரவிந்த் கெஜ்ரிவால், ”நாளை மதியம் 1 மணிக்குள் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்க வேண்டும் என்று சவால் விடுத்தார்.  மேலும் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரிடம் எத்தகைய விவாதத்திற்கும் தான் தயாராக உள்ளதாக கூறினார். இவ்வாறு முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்காவிட்டால் மீண்டும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான் தயார் என்று மத்திய உள்துறைமந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “அரவிந்த் கெஜ்ரிவால், எங்களை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்படி கூறியிருக்கிறார். மேலும், விவாதம் நடத்தத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரத்தையும், இடத்தையும் சொன்னால்போதும். பா.ஜ.க. உறுப்பினர்கள் அங்கு விவாதிக்க வருவார்கள். முதல்வரைப் பொருத்தவரை டெல்லி மக்கள்தான் எங்கள் முதல்வர்” என்று கூறினார்.  


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் கெஜ்ரிவால் ஆலோசனை
டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவுடன், அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
2. ஆம்பன் புயலை எதிர்கொள்ள முப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார்; அஜய் பல்லா
ஆம்பன் புயலை எதிர்கொள்ள முப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன என மத்திய உள்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
3. யுவராஜ்சிங்கின் சவாலை ஏற்று கண்களை துணியால் கட்டிக்கொண்டு அசத்திய தெண்டுல்கர்
யுவராஜ்சிங்கின் சவாலை ஏற்று கண்களை துணியால் கட்டிக்கொண்டு தெண்டுல்கர் அசத்தினார்.
4. தெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் சவால்
சச்சின் தெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் சவால் விடுத்துள்ளார்.
5. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களுக்கு வாலாஜா மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் தயார்
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் வாலாஜா அரசு மருத்துவமனையில் தற்போது 500 படுக்கை வசதிகள் தயாராக உள்ளது என கலெக்டர் கூறினார்.