தேசிய செய்திகள்

‘நிர்பயா’ வழக்கு 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா? - டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு + "||" + Will the Nirbhaya case stop 4 people from being hanged? - Judgment of Delhi Highcourt today

‘நிர்பயா’ வழக்கு 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா? - டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

‘நிர்பயா’ வழக்கு 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா? - டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளான 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா என்பது குறித்த டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
புதுடெல்லி,

‘நிர்பயா’ என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவி, டெல்லியில் 2012-ம் ஆண்டு, ஓடும் பஸ்சில் கும்பல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார்.

இதில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அவர்கள் 4 பேரும் தூக்கில் போடப்படுவதை தள்ளிப்போடுகிற வகையில் நாளும் ஒரு சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்களை கடந்த 1-ந்தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில் போட ஏற்பாடு ஆனது. அதை எதிர்த்து அவர்கள் டெல்லி பாட்டியாலா செசன்சு கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களை தூக்கில் போட தடை விதித்து அந்த கோர்ட்டு கடந்த 31-ந்தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு சார்பிலும், மாநில அரசு சார்பிலும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை கடந்த சனிக்கிழமையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் விசாரித்த நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வெளியாகிறது. அப்போது ‘நிர்பயா’ வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட தடை விலகுமா என்பது தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது - பிரதமர் மோடி
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
2. நிர்பயா வழக்கு - குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
3. நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி குற்றவாளிகள் அளித்த மனு தள்ளுபடி
தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி நிர்பயா குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
4. கொரோனா வைரஸ் எதிரொலி: கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகள் கலை நிகழ்ச்சிக்கு தடை
கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் விழாக்களில் நடத்தப்படும் கரகாட்டம், பாட்டு கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
5. திருநள்ளாறு குளத்தில் குளிக்க தடை தலையில் தண்ணீர் தெளித்து சென்ற பக்தர்கள்
திருநள்ளாறு சனிபகவான் கோவில் குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து பக்தர்கள் தலையில் தண்ணீர் தெளித்து சென்றனர்.