மாநில செய்திகள்

கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு: ரூ.15 லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர் சிக்கினார் + "||" + Village Administrative Officer examination malpractice: The man who got the job paid Rs 15 lakh

கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு: ரூ.15 லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர் சிக்கினார்

கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு: ரூ.15 லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர் சிக்கினார்
ரூ.15 லட்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் சிக்கினார். இதன்மூலம் 2016-ம் ஆண்டு நடந்த குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னை, 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த முறைகேடுகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளியாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அதிகாரியான நாராயணன் என்ற சக்தி என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி சக்தி மூலமாகத்தான் ஜெயக்குமாரிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.

போலீஸ்காரர் சித்தாண்டி ரூ.2 கோடி வரை பணம் கொடுத்து 22 பேரை முறைகேடாக அரசு வேலையில் சேர்த்துள்ளார். கைதான இன்னொரு போலீஸ்காரர் பூபதியும் ரூ.55 லட்சம் கொடுத்து 5 பேரை அரசு வேலையில் சேர்த்துள்ளார்.

கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அவரிடம் நடத்திய விசாரணையில் 2016-ம் ஆண்டு குரூப்-4 கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது.

அந்த தேர்வில் கலந்துகொண்ட கிராம நிர்வாக அதிகாரி சக்தி ரூ.15 லட்சத்தை இடைத்தரகர் ஜெயக்குமார் மூலம் கொடுத்து வேலையில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள ஜெயக்குமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, முத்துக்குமார் ஆகியோர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 2018-ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு அம்பலம்: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரிடம் விசாரணை - சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்குப்பதிவு
2018-ல் நடந்த ‘நீட்’ தேர்விலும் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக சென்னை மருத்துவக்கல்லூரி மாணவரிடம் விசாரணை நடக்கிறது.
2. அரூர் அரசு பள்ளியில் சத்துணவில் முறைகேடு செய்த அமைப்பாளர் பணி இடைநீக்கம்
அரூர் அரசு பள்ளியில் சத்துணவில் முறைகேடு செய்த அமைப்பாளர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.
3. போலீஸ் தேர்விலும் மிகப்பெரிய முறைகேடு சி.பி.ஐ. விசாரணை கேட்டு 15 பேர் ஐகோர்ட்டில் வழக்கு
சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2-ம் நிலை காவலர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் 15 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
4. மைக்ரோசாப்ட்டுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடா? - டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக டிரம்பை விசாரிக்க ‘அமேசான்’ கோரிக்கை விடுத்துள்ளது.
5. 100 நாள் வேலை திட்டம்: நரிக்குடி யூனியனில் ரூ.31 லட்சம் முறைகேடு - விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு
நரிக்குடி யூனியனில் உள்ள ஆண்டியேந்தல் பஞ்சாயத்தில் 100 நாள் வேலை திட்ட நிதியில் ரூ.31 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.