சினிமா செய்திகள்

மீண்டும், மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய் + "||" + After IT Raid, Vijay took part in the master film shooting

மீண்டும், மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்

மீண்டும், மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்
வருமான வரி துறை விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.
நெய்வேலி,

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். பட நிறுவன அலுவலகங்கள் மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு வருமான வரித்துறையினர் அழைத்து வந்தனர். 

இரு தினங்களாக விஜய் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 

வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார். நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டதால் ரசிகர்கள், படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜய் வீட்டில் சோதனை: வருமானவரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சென்னையில் அதிகாரிகள் ஆலோசனை
நடிகர் விஜய் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
2. நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்; 3 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு
வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் உள்பட 3 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 3 நாட்களுக்குள் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
3. நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியனை விசாரிக்க சம்மன் -வருமான வரித்துறை முடிவு
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரிடம் சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
4. கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை
கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டு உள்ளது.
5. பாகுபலி-2 சாதனையை முறியடித்த நடிகர் விஜய்யின் பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி
நடிகர் விஜய்யின் 'பிகில்' 3 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாகுபலி-2 சாதனையை முறியடித்துள்ளது.