மாநில செய்திகள்

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: கூட்டணியை மேலும் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர் + "||" + KS Alagiri meets MK Stalin at Anna Vidyalayam: They discussed strengthening the alliance

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: கூட்டணியை மேலும் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: கூட்டணியை மேலும் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, கே.எஸ்.அழகிரி நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை மேலும் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. தலைமையில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் போராட்டம் நடைபெற்றது. 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை நடந்த கையெழுத்து இயக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பங்கேற்று, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வந்தனர்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்தார். அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எச்.வசந்தகுமார் எம்.பி., ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்தனர். இந்த சந்திப்பின்போது ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், வில்சன் உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்களும் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆதரவு அளித்தனர் என்றும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு உள்ளார்கள் என்றும் மு.க.ஸ்டாலினிடம், கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்களை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் மூலம் ஜனாதிபதியிடம் எப்போது சமர்ப்பிப்பது? என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது.

விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணியை மேலும் பலப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்துரையாடினர். மேலும் அரசியல் நிலவரம் குறித்தும் பல்வேறு விஷயங்களை ஆலோசித்தனர். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. 68-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து - நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்
மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் கொண்டாடினர்.
3. ஆஸ்பத்திரியில் அன்பழகன்: என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆஸ்பத்திரியில் க.அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்: விவசாயி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
உழைப்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும், விவசாயி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு எரிச்சலாக இருக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5. அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு; விரைவில் விசாரணை
தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.