மாநில செய்திகள்

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்; 3 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு + "||" + Actor Vijay receives income tax department summons; Attendance order within 3 days

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்; 3 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்; 3 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு
வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் உள்பட 3 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 3 நாட்களுக்குள் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, 

நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அசையா சொத்து ஆவணங்களின் மதிப்பு எவ்வளவு? இதன் மூலம் அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வைத்து உள்ளனர்.

இதுதவிர பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் அன்புசெழியன் ரூ.165 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக அடுத்த 3 நாட்களில் நேரில் ஆஜராக அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே நடிகர் விஜய் உள்பட 3 பேரும், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்துக்கு இன்று(திங்கட்கிழமை) அல்லது நாளை(செவ்வாய்க்கிழமை) அல்லது நாளை மறுநாள் நேரில் வந்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல் களை வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன் - சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நாளை ஆஜராக உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
2. நடிகர் விஜய் வீட்டில் சோதனை: வருமானவரித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சென்னையில் அதிகாரிகள் ஆலோசனை
நடிகர் விஜய் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
3. ஈரோட்டில், தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
4. நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியனை விசாரிக்க சம்மன் -வருமான வரித்துறை முடிவு
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரிடம் சம்மன் அனுப்பி விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
5. மீண்டும், மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றார் விஜய்
வருமான வரி துறை விசாரணைக்குப் பின்னர் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார்.