தேசிய செய்திகள்

காஷ்மீரில் இந்திய ராணுவம் பதிலடி; 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொலை + "||" + 3 Pakistani terrorists were killed in Indian retaliation across LoC in JK

காஷ்மீரில் இந்திய ராணுவம் பதிலடி; 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் இந்திய ராணுவம் பதிலடி; 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் மெந்தார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  அவர்களை நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 3 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என உளவு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த சில நாட்களாக மெந்தார் மற்றும் பிற பிரிவுகளில் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது.  இதில் இந்திய தரப்பில் ராஜீவ் சிங் ஷெகாவத் என்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  3 வீரர்கள் காயமடைந்து உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...