கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; கே.எல். ராகுல் சதம் + "||" + 3rd ODI against NZ; KL. Rahul hits ton

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; கே.எல். ராகுல் சதம்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; கே.எல். ராகுல் சதம்
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்து உள்ளார்.
மவுன்ட்மாங்கானு,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடக்கிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 110-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 போட்டிகளில் இந்திய அணி 55 ஆட்டங்களிலும், நியூசிலாந்து அணி 48 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஒரு ஆட்டம் டை ஆனது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.  இந்திய அணியில் கேதர் ஜாதவ் விளையாடவில்லை.  மணீஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கேப்டன் கோலி கூறும்பொழுது, முதலில் பேட்டிங் செய்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை.  அதிக ரன்களை குவித்து சவால் ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  கடந்த இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்துக்கு எதிராக கடுமையான போட்டியை எங்களுடைய அணி ஏற்படுத்தியது என பெருமைப்பட கூறினார்.

இதேபோன்று நியூசிலாந்தில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டு உள்ளார்.  

இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40), மயங்க் அகர்வால் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  அடுத்து ஆடிய கோலி (9), ஸ்ரேயாஸ் (62) ரன்களில் வெளியேறினர்.  இதன்பின் கே.எல். ராகுல், மணீஷ் பாண்டேயுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வருகிறார்.

அவர் 44 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரை பென்னட் வீசினார்.  இதில் 2வது பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்து சதம் பூர்த்தி செய்து உள்ளார்.  இவற்றில் 1 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகளும் அடங்கும்.  தொடர்ந்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 46 ஓவர்கள் முடிவில் 261 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; ரஹானே சதம் விளாசல்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானே சதம் விளாசினார்.
2. ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று தொடங்கிய கடைசி டெஸ்டில் இந்திய அணி 39 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், ரோகித் சர்மாவின் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது.
3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
4. முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சதம் விளாசியுள்ளார்.