தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தடை + "||" + On Kejriwal's orders, no firecrackers at AAP headquarters as party celebrates poll victory

டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தடை

டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க கெஜ்ரிவால் தடை
டெல்லி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது.  இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதனை முன்னிட்டு தொண்டர்கள் யாரும் கட்சி தலைமை அலுவலகங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாமென கெஜ்ரிவால் கேட்டு கொண்டார்.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.  அதனை குறைக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக இந்நடவடிக்கையை கெஜ்ரிவால் எடுத்து உள்ளார்.

இதனால் அக்கட்சி தொண்டர்கள், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.  கெஜ்ரிவாலின் உத்தரவை மீறாமல் கடைப்பிடிப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.  எனினும், இனிப்புகளை வாங்கி அவற்றை ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ந்து வருகின்றனர்.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைப்போம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய ஒன்றாக இடம் பிடித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரத்தில் 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு
இலங்கையில் ‘பர்தா’ அணிய உடனடி தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.
3. ‘நிர்பயா’ வழக்கு 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா? - டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
நிர்பயா வழக்கு குற்றவாளிகளான 4 பேரை தூக்கில் போட தடை விலகுமா என்பது குறித்த டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
4. தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
5. தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.