தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து + "||" + DelhiElectionResults Arvind Kejriwal Mamta Banerjee, MK Stalin Greeting

டெல்லி தேர்தல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

டெல்லி தேர்தல் வெற்றி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது.  இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 60  இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பாஜக வை மக்கள் நிராகரித்து விட்டனர். வளர்ச்சியே செயல்பட்டுள்ளது. சிஏஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர். ஆகியவை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மிகப்பெரிய வெற்றியுடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மிக்கு எனது வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை வளர்ச்சி திட்டங்கள் தோற்கடிக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். நாட்டின் நலன் கருதி, கூட்டாட்சி உரிமைகள் மற்றும் மாநிலத்தின் விருப்பங்கள் ஆகியவை பலப்படுத்தப்பட வேண்டும். 

இவ்வாறு அந்த பதிவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.