மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு + "||" + What action has been taken to prevent the spread of coronavirus?

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? -  அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரானா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

டெங்கு நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி 2018ம் ஆண்டு வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா  வைரஸ் பரவாமல் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.