தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து + "||" + Prime Minister Narendra Modi Congratulations to AAP and Arvind Kejriwal for the victory in the Delhi Assembly election

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 8ம் தேதி, நடந்த பொதுத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. எண்ணிக்கை துவங்கியது முதல் பெரும்பான்மை இடங்களில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் தொடர்ந்து, 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பொறுப்பேற்கிறார். 

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற  ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஜிக்கு வாழ்த்துக்கள். டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. புத்தாண்டையொட்டி உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புத்தாண்டையொட்டி உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.