மாநில செய்திகள்

7 பேர் விடுதலை விவகாரம்: அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" - மு.க.ஸ்டாலின் கருத்து + "||" + 7 were released The opinion of MK Stalin

7 பேர் விடுதலை விவகாரம்: அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" - மு.க.ஸ்டாலின் கருத்து

7 பேர் விடுதலை விவகாரம்: அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" - மு.க.ஸ்டாலின் கருத்து
7 பேர் விடுதலை குறித்து அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் 'குட்டு வைத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"பேரறிவாளர் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு" அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அமைச்சரவை தீர்மானம் மற்றும், மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" வைத்துள்ளது.

எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி- பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.