தேசிய செய்திகள்

பிரதமர் மோடி, அமித்ஷா கட்டவிழ்த்து விட்ட நச்சு பிரசாரம் முறியடிப்பு காங்கிரஸ் கருத்து + "||" + People's mandate is against us: Congress accepts defeat in Delhi polls, vows to rebuild itself

பிரதமர் மோடி, அமித்ஷா கட்டவிழ்த்து விட்ட நச்சு பிரசாரம் முறியடிப்பு காங்கிரஸ் கருத்து

பிரதமர் மோடி, அமித்ஷா கட்டவிழ்த்து விட்ட நச்சு பிரசாரம் முறியடிப்பு காங்கிரஸ் கருத்து
பிரதமர் மோடி, அமித்ஷா கட்டவிழ்த்து விட்ட நச்சு நச்சு பிரசாரத்தை மக்கள் முறிடியத்துள்ளனர் என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

மக்கள் தீர்ப்பு எங்களுக்கு எதிராக உள்ளது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். கட்சியை கீழ்மட்ட அளவில் மறுகட்டமைப்பு செய்து பலப்படுத்துவோம். விரைவில் மீண்டு எழுவோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பி.சி.சாக்கோ கூறுகையில், ‘‘மோடி, அமித்ஷா ஆகியோர் கட்டவிழ்த்து விட்ட நச்சு பிரசாரத்தை மக்கள் முறிடியத்துள்ளனர்‘‘ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...