தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் அறிமுகம்; 3 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு + "||" + Opposition to the resolution against the CAA; 3 BJP MLAs walk away

புதுச்சேரி சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் அறிமுகம்; 3 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் அறிமுகம்; 3 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தீர்மான அறிமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் 3 எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி,

புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர்.  பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவர்கள், அரசியலமைப்பு சட்டத்தினை காலால் மிதிக்கும் நாராயணசாமி அரசை கண்டிக்கிறோம்.  புதுச்சேரி சட்டசபையை காங்கிரஸ் கட்சியின் கூடாரமாக மாற்றி சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் மற்றும் இந்தியாவை துண்டாட நினைக்கும் அரசை கண்டிக்கிறோம் போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி அவைக்கு வெளியே அவர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கூறி 3 எம்.எல்.ஏ.க்களும் நேற்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதன்பின் கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினர். அப்போது, சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவர உள்ளதை அனுமதிக்க கூடாது என்று சட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் கொடுத்தனர்.

இதன்பின், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் அனுப்பினார்.  இந்நிலையில், புதுச்சேரி அவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...