தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் + "||" + Puducherry Assembly passes resolution on citizenship amendment

புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
புதுச்சேரி,

புதுச்சேரியில் இன்று நடைபெறும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கூறி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.

தொடர்ந்து நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடியை சந்தித்து பேசினர். அப்போது, சட்ட சபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவர உள்ளதை அனுமதிக்க கூடாது என்று சட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் கொடுத்தனர்.

இதனை அடுத்து கவர்னர் கிரண்பெடி, குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் கையெழுத்திடப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது புதுச்சேரிக்கும் பொருந்தும். யூனியன் பிரதேச சட்டங்களின்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாம் கேள்வி எழுப்ப முடியாது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

மேலும் இந்த சட்டம் தொடர்பான பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள எந்த ஒரு பிரச்சினை தொடர்பாகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்க முடியாது என முதல் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் 3 எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின்னர் விவாதத்திற்கு பின் காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேறியது.  இதேபோன்று தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானமும் நிறைவேறியது.

தொடர்ந்து அவையில் பேசிய முதல் அமைச்சர், எங்கள் அரசை டிஸ்மிஸ் செய்ய முயற்சி மேற்கொண்டால் அதனை சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறினார்.