மாநில செய்திகள்

வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி நாடகம் - மு.க.ஸ்டாலின் தாக்கு + "||" + Chief Minister Palanisamy's play to declare agriculture zone MKStalin

வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி நாடகம் - மு.க.ஸ்டாலின் தாக்கு

வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி நாடகம் - மு.க.ஸ்டாலின் தாக்கு
விவசாயிகளை ஏமாற்றுவதற்காக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி நாடகம் நடத்துகிறார் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை,

சென்னை மதுரவாயலில் தி.மு.க. பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் பெற தி.மு.க. எடுத்த நடவடிக்கைகளை நினைவு கூர்ந்தார். 

மேலும் விவசாயிகளை ஏமாற்றுவதற்காக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து முதலமைச்சர்  பழனிசாமி நாடகம் நடத்துகிறார். 

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு தானே அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், கச்சா எண்ணெய் எடுக்க ஏற்கனவே தோண்டப்பட்ட 37 கிணறுகளின் பணிகள் நிறுத்தப்படுமா என்றும் முதலமைச்சர்  பழனிசாமிக்கு கேள்வி எழுப்பினார். 

ஆசிரியரின் தேர்வுகள்...