தேசிய செய்திகள்

காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது: காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்த பி.சி. சாக்கோ பேட்டி + "||" + PC Chacko, Congress: I did not say that we lost in Sheila Ji's time

காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது: காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்த பி.சி. சாக்கோ பேட்டி

காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது:  காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்த பி.சி. சாக்கோ பேட்டி
காங்கிரஸ் பல தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது என காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்த பி.சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, அங்கு புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ந்தேதி நடைபெற்றது.  டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 22 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.  ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.  இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில்   காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத அக்கட்சியால், 63 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இதனையடுத்து டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அக்கட்சி மூத்த தலைவர் பி.சி. சாக்கோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீக்சித் டெல்லி முதல்-மந்திரியாக இருந்தபோதே 2013ல் காங்கிரசின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. ஆம் ஆத்மி கட்சி துவங்கியவுடன், காங்கிரசின் மொத்த ஓட்டு வங்கியும் அக்கட்சிக்கு சென்றுவிட்டது. அதனை நாம் திரும்ப பெற முடியாது. 

அந்த ஓட்டு வங்கி ஆம் ஆத்மியிடமே நீடிக்கும். காங்கிரசில் உள்ள ஒரு சிலர் திட்டமிட்டே எனக்கு எதிராக பிரசாரம் செய்கின்னறர். 2013-ம் ஆண்டு மட்டுமல்ல காங்கிரஸ் 2014, 2015, 2017 என பல தேர்தல்களில் தோல்வியை தழுவியுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.