தேசிய செய்திகள்

நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன் - நிர்பயாவின் தாய் கண்ணீர் பேட்டி + "||" + Nirbhaya's mother: I am wandering here and there to get justice for my daughter

நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன் - நிர்பயாவின் தாய் கண்ணீர் பேட்டி

நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன் - நிர்பயாவின் தாய் கண்ணீர் பேட்டி
தண்டனையை தாமதிக்க குற்றவாளிகள் முயல்கின்றனர் என்பதை நீதிமன்றம் ஏன் புரித்துகொள்ளவில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன் என நிர்பயாவின் தாய் கூறினார்.
புதுடெல்லி,

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தில் மத்திய மற்றும் டெல்லி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா சார்பில், தனக்காக சட்ட நிவாரணம் பெற்றுத் தர வழக்குரைஞர் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டதை அடுத்து, அவருக்கு சட்ட உதவி வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

7 ஆண்டுகளாகபோராடிக் கொண்டிருக்கிறேன். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என்று கூறி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதையடுத்து, குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை நிர்ணயிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில்  நீதிமன்றத்தின் வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் நிர்பயாவின் தயார் கூறியதாவது:-

என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். இந்த குற்றவாளிகள் தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். தண்டனையை தாமதிக்க முயல்கின்றனர் என்பதை நீதிமன்றம் ஏன் புரித்துகொள்ளவில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன் என தெரிவித்தார்.