மாநில செய்திகள்

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் + "||" + Great to attract investments in Asia itself State of Tamil Nadu EdappadiPalaniswami

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடு - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்
ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசின் தொழில் துறைக்கும் 'சியட்' நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் 4000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிறுவனம் மூலம் 10 ஆண்டுகளுக்குள் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டயர் தொழிற்சாலையை  துவக்கி வைத்த பின் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

வாகன உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இரு சக்கர வாகன டயர் முதல் போர் விமான டயர் வரை தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 40% டயர்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் மாநிலம் தமிழ்நாடுதான். சில மாநிலங்கள் சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னிலை வகிக்கின்றன. சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றன. ஆனால், சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என துறைகள் தோறும் சிறப்பிடம் பெற்று, அனைவருக்குமான வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்
'தாய் மொழிக்காக உயிர் துறந்த ஒரே இனம் தமிழ் இனம் தான்' என வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.