உலக செய்திகள்

தீவிரவாத செயல்களுக்கு நிதி வழங்கிய வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் + "||" + A Pakistan court convicts Jamat-ud-Dawa chief (JuD) Hafiz Saeed for 5 years in terror financing cases

தீவிரவாத செயல்களுக்கு நிதி வழங்கிய வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம்

தீவிரவாத செயல்களுக்கு நிதி வழங்கிய வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம்
தீவிரவாத செயல்களுக்கு நிதி வழங்கிய வழக்கில் ஹபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமபாத்,

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு தொடர்ச்சியாக 12 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு தாக்குதல்களிலும் ஈடுபட்டது.  இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.  கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க கருவூல துறையானது சயீத் சர்வதேச குற்றவாளி என அறிவித்து, அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

இதனிடையே மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் தான் என பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்க மறுத்ததுடன் போதிய ஆதாரம் இல்லை என்று கூறியது. மேலும் ஆதாரம் வேண்டும் என்று இந்தியாவை பாகிஸ்தான் அலைகழித்தது. மேலும் அந்நாட்டிலே ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தான் தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களுக்காக 23 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2017 ஆம் ஆண்டில், ஹபீஸ் சயீத் மற்றும் அவரது நான்கு உதவியாளர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் பயங்கரவாத சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.