தேசிய செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே தோல்விக்கு காரணம் - கபில் சிபில் + "||" + Congress doesn't have a leader to project, says Kapil Sibal after party's drubbing in Delhi polls

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே தோல்விக்கு காரணம் - கபில் சிபில்

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே தோல்விக்கு காரணம் - கபில் சிபில்
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி: சரியான தலைவரை முன்னிறுத்த முடியாமல் போனதே தோல்விக்கு காரணம் - கபில் சிபில்
புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 8ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது. பாஜக 8 இடங்களில் வென்றது.

ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 

கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர்  சோகத்தில் உள்ளனர். 

இந்த நிலையில், டெல்லியில் அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல்  செய்தியாளரிடம் கூறுகையில்,

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு காரணம், சரியான தலைவரை இனங்கண்டு முன்னிறுத்த முடியாமல் போனதே. டெல்லியில் ஏற்பட்ட நிலை தான் பீகாரிலும் தொடரும் என பா.ஜ.க.வுக்கு கபில்சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பா.ஜ.க. பிரசாரத்தால் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்காமல் போன நிலையில், நாட்டுக்கு முதலீடுகள் வருவதும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...