மாநில செய்திகள்

ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: வெளியுறவுத்துறை மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் + "||" + In Japan Luxury Ship The trapped Indians MK Stalin Letter to Foreign Minister

ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: வெளியுறவுத்துறை மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: வெளியுறவுத்துறை மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கருக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:–

ஜப்பான் நாட்டை சேர்ந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் கடந்த 9 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இருக்கும் பயணிகள் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் இருக்கும் 3 ஆயிரத்து 500 பயணிகளில், 60 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த அன்பழகன் என்பவர் அந்த கப்பலில் பணியாற்றி வருகிறார். அவர் தன்னுடைய நண்பருக்கு ‘வாட்ஸ் அப்’ மூலமாக ஒரு தகவலை அனுப்பியுள்ளார். அதில், ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் 100 இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும், அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் 100 இந்தியர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு, இந்திய பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் தாயகம் திரும்புவதை உறுதி செய்யவேண்டியது உங்களுடைய கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.