தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதல்; 12 பேர் பலி + "||" + 12 killed in bus-truck collision in UP's Firozabad

உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதல்; 12 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதல்; 12 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
பிரோசாபாத்,

உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் இருந்து லக்னோ செல்லும் விரைவுசாலையில் தனியார் பேருந்து ஒன்று டெல்லியில் இருந்து பீகாரில் உள்ள மோதிஹரி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது.  அந்த பேருந்து இரவு 10 மணியளவில் கன்டெய்னர் லாரி ஒன்றின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர்.  31 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் இடாவா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுபற்றி அறிந்த முதல் மந்திரி ஆதித்யநாத் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும், காயமடைந்தோருக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதல்; 3 பெண்கள் பலி வடமாநில சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த துயரம்
சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் அவர்களுடன் வந்த 10 பேர் காயம் அடைந்தனர். வடமாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு இந்த துயரம் நிகழ்ந்தது.
2. ஜேடர்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி 2 பேர் படுகாயம்
ஜேடர்பாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் விவசாயி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.
4. சுவர் விளம்பரங்கள் மாற்றி மாற்றி அழிப்பு: அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே மோதல் விழுப்புரத்தில் பரபரப்பு
விழுப்புரத்தில் சுவர் விளம்பரங்களை மாற்றி மாற்றி அழித்ததில், அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
5. பாடாலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
பாடாலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர்.