தேசிய செய்திகள்

கெஜ்ரிவால் பதவியேற்பு விழா; பிற மாநில முதல் மந்திரிகளுக்கு அழைப்பு இல்லை + "||" + No CM, political leaders from other states will be invited for Kejriwal's oath ceremony: Gopal Rai

கெஜ்ரிவால் பதவியேற்பு விழா; பிற மாநில முதல் மந்திரிகளுக்கு அழைப்பு இல்லை

கெஜ்ரிவால் பதவியேற்பு விழா; பிற மாநில முதல் மந்திரிகளுக்கு அழைப்பு இல்லை
கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிற மாநில முதல் மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என கோபால் ராய் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, அங்கு புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8ந்தேதி நடைபெற்றது.  டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. 22 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.  ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.  இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன.  காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.  தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லி முதல் மந்திரியாக 3வது முறையாக கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்கிறார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வருகிற 16ந்தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.  இந்த விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்று கொள்கிறார்.

இதனிடையே, அக்கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பிற மாநில முதல் மந்திரிகளுக்கோ அல்லது அரசியல் கட்சி தலைவர்களுக்கோ அழைப்பு இல்லை.

அவரது தலைமை மீது நம்பிக்கை கொண்ட டெல்லி மக்கள் முன்னிலையிலேயே கெஜ்ரிவால் பதவி பிரமாணம் செய்து கொள்வார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தியுடன் ஹேமந்த் சோரன் இன்று மாலை சந்திப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தனது பதவியேற்பு விழாவிற்கு வரும்படி ஹேமந்த் சோரன் இன்று மாலை அழைப்பு விடுக்கிறார்.
2. மராட்டியத்தில் பதவியேற்பு விழா; பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம்
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.