தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு ரகசிய கணக்கெடுப்பு; மம்தா பானர்ஜி கண்டனம் + "||" + NCR Confidential Survey in WB; Mamata Banerjee condemns

மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு ரகசிய கணக்கெடுப்பு; மம்தா பானர்ஜி கண்டனம்

மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு ரகசிய கணக்கெடுப்பு; மம்தா பானர்ஜி கண்டனம்
மேற்கு வங்காளத்தில் குடிமக்கள் பதிவேடு பற்றி நடந்த ரகசிய கணக்கெடுப்புக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பங்குரா,

நாட்டில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த முயற்சிப்பதாக பாரதீய ஜனதா கட்சி மீது மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சாடி வருகிறார்.

இச்சட்டத்திற்கு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.  இதனிடையே பங்குரா நகரில் நடந்த கூட்டமொன்றில் அவர் பேசும்பொழுது, ஹப்ரா பகுதியில் உள்ள நகை கடை ஒன்றிற்கு சென்ற 15 பா.ஜ.க. தொண்டர்கள் அங்குள்ளவர்களிடம், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு தேவையான ஆவணங்களை கேட்டுள்ளனர் என அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது.

யார் அவர்கள்?  அவர்களுக்கு யார் இந்த அதிகாரம் வழங்கியது?  உங்கள் வீடுகளுக்கு அவர்களில் யாரேனும் வந்தால் எந்த விவரங்களையும் அளிக்காதீர்கள் என கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மத்திய அரசின் கட்டுக்குள் உள்ள வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களை சேர்ந்த அதிகாரிகள், பா.ஜ.க.வின் பெயரை கூறாமல் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  வீடு வீடாக அவர்கள் செல்கின்றனர்.  யாரும் தகவல் தரவேண்டாம்.  மேற்கு வங்காள அரசு ஒப்புதல் இன்றி அவர்கள் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.