தேசிய செய்திகள்

பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளை மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது + "||" + 10 held in connection with molestation of women in Gargi College

பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளை மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது

பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளை  மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது
பெண்கள் கல்லூரி நிகழ்ச்சியில் ஊடுருவி மாணவிகளை தகாத முறையில் மானபங்கப்படுத்திய 10 சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி

தெற்கு டெல்லியில் கடந்த 6 ஆம் தேதி நடந்த  பெண்கள் கல்லூரி  நிகழ்ச்சி ஒன்றில்  புகுந்த கும்பல் ஒன்று மாணவிகளிடம் அத்துமீறியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 10 இளைஞர்களை இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 31-வது நாளாக டெல்லயில் தொடரும் போராட்டம்
டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2. நாங்கள் எந்த பணியும் செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால், எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் -அரவிந்த் கெஜ்ரிவால்
கல்வி, மின்சாரம், நீர், மேம்பாட்டுப் பணிகளில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
3. டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது
டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது என வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்து உள்ளது.
4. 119 ஆண்டுகளில் இல்லாத அளவு குளிரில் நடுங்கிய டெல்லி
119 ஆண்டுகளில் இல்லாத அளவு தலைநகரில் நேற்று இதுவரை கண்டிராத குளிராக இருந்தது.
5. டெல்லியில் மீண்டும் பயங்கரம்: ஜவுளி குடோனில் தீ விபத்து; 9 பேர் சாவு
டெல்லியில் ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.