தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு; குற்றவாளி வினய் சர்மா மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + SC rejects Nirbhaya convict Vinay's request to peruse recommendation for rejection of mercy plea

நிர்பயா வழக்கு; குற்றவாளி வினய் சர்மா மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நிர்பயா வழக்கு; குற்றவாளி வினய் சர்மா மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மாவின் கோரிக்கை மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய நால்வருக்கும் டெல்லி விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இதனை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.

இந்நிலையில், வினய் சர்மா சார்பில், கருணை மனு நிராகரிப்பு பற்றிய பரிந்துரையை கவனமுடன் ஆய்வு செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை மனு ஒன்று முன் வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண் மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.  இதில், வினய் சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.பி. சிங், டெல்லி ஆளுநர் மற்றும் உள்துறை மந்திரி இருவரும் கருணை மனுவை தள்ளுபடி செய்வதற்கு பரிந்துரைப்பதற்கான கையெழுத்திடவில்லை என கூறினார்.

இந்த மனு நிராகரிப்பில் அவசரம் காட்டப்பட்டது சட்டவிரோதம்.  அரசியல் சாசன மெய்ப்பொருள் மீறப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

எனினும், நீதிபதிகள் ஆவண சரிபார்ப்புக்கு பின்னர், டெல்லி ஆளுநர் மற்றும் உள்துறை மந்திரி இருவரும் கருணை மனுவை தள்ளுபடி செய்வதற்கு பரிந்துரை செய்து கையெழுத்திட்டுள்ளனர் என தெரிவித்தனர்.  தொடர்ந்து வினயின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.