மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு: இரு பெண் அதிகாரிகள், இடைத்தரகர் கைது - சிபிசிஐடி + "||" + TNPSC Group-2A exam Abuse Three arrested

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு: இரு பெண் அதிகாரிகள், இடைத்தரகர் கைது - சிபிசிஐடி

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு: இரு பெண் அதிகாரிகள், இடைத்தரகர் கைது - சிபிசிஐடி
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்குகளில் நேற்று முன்தினம் வரை 40 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமார் என்ற முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்த வழக்குகளில் தினமும் கைது நடவடிக்கை தொடருகிறது. இதற்கிடையே நேற்று 41-வது குற்றவாளியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார் டிரைவர் மரியலிஜோஸ்குமார் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மருத்துவ துறை, பதிவு துறையை சேர்ந்த இரு பெண் அதிகாரிகள் ஆவர். இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.