உலக செய்திகள்

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட நாடுகளை உளவு பார்க்கும் சி.ஐ.ஏ + "||" + CIA spied on more than 100 countries including India and Pakistan for decades through its company that supplied rigged encoding devices

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட நாடுகளை உளவு பார்க்கும் சி.ஐ.ஏ

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட நாடுகளை  உளவு பார்க்கும் சி.ஐ.ஏ
சி.ஐ.ஏ இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட நாடுகளை தனியார் நிறுவனம் மூலம் பல ஆண்டுகளாக உளவு பார்த்து வந்து உள்ளது.
புதுடெல்லி

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு இந்தியா உள்பட பல நாடுகளை சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனம் மூலம் ரகசியமாக உளவு பார்த்து உள்ளது

இந்த நிறுவனம் உளவாளிகள், வீரர்கள் மற்றும் தூதர்களின்  தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதாக உலகம் முழுவதிலுமுள்ள அரசாங்கங்களால் நம்பப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிப்டோ ஏஜி நிறுவனம் என்ற இந்த நிறுவனம்  1940 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இது ஒரு தனியார் நிறுவனமாக தகவல் தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்றது.

இந்த நிறுவனம்  1951 ஆம் ஆண்டில் சிஐஏவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  இறுதியாக, 1970 களில் மேற்கு ஜேர்மன் புலனாய்வு நிறுவனத்துடன் இணைந்து சிஐஏ நிறுவனத்திற்கு சொந்தமானது என்று வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஜெர்மன் பொது ஒளிபரப்பு இசட்எஃப் ஆகியவற்றின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ ஏஜி பனிப்போர் காலத்திலிருந்து 2000 கள் வரை 120 க்கும் மேற்பட்ட நாடுகளின் தகவல்கள் அடங்கிய  என்கோடிங் டிவைஸ்களை வழங்கி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...