தேசிய செய்திகள்

சீனாவுக்கு மருத்துவபொருட்கள் அனுப்ப உள்ளோம் - மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பேட்டி + "||" + we are sending some medical supplies, equipments and other materials to China as a goodwill measure Union Minister Dr Harsh Vardhan

சீனாவுக்கு மருத்துவபொருட்கள் அனுப்ப உள்ளோம் - மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பேட்டி

சீனாவுக்கு மருத்துவபொருட்கள் அனுப்ப உள்ளோம் - மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பேட்டி
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு மருத்துவபொருட்களை அனுப்ப உள்ளோம் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை உகானில் அமெரிக்க பெண் மற்றும் ஜப்பானிய ஆண் என வெளிநாடுகளை சேர்ந்த 2 பேர் பலியாகி உள்ளனர்.  இதேபோன்று, பிலிப்பைன்ஸ் தீவில் சீனர் ஒருவர் மற்றும் ஹாங்காங் நாட்டில் ஒருவர் என சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் இருவர் பலியாகினர்.

இந்தநிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் தனி வார்டில் சோதனை செய்யப்பட்ட 402 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர்கள் நலமுடன் உள்ளனர். மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா கப்பலில் 2 இந்தியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சீனாவில் நடப்பது போன்று இந்தியாவில் நடந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தேவையான அளவில் அனைத்தும்  கையிருப்பு வைத்துள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா விளக்கி உள்ளார். 

நல்லெண்ண அடிப்படையில் சீனாவுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்ப உள்ளோம். தற்போதுவரை விமான நிலையங்களில்  2,51,447 பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.  12 பெரிய துறைமுகங்களிலும் 65 சிறு துறைமுகங்களிலும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.