தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கு: சட்டசிக்கலை உருவாக்கும் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் + "||" + 2012 Delhi gang-rape case: Delhi's Patiala House Court adjourns for 17th Feb

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கு: சட்டசிக்கலை உருவாக்கும் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கு: சட்டசிக்கலை உருவாக்கும் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய மத்திய அரசின் வழக்கு சட்டசிக்கலை உருவாக்கும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கூறியுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய நால்வருக்கும் டெல்லி விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. 

இதனை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. இந்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.

இந்தநிலையில்  நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய மத்திய அரசு சார்பில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி தற்போது உத்தரவு பிறப்பித்தால் அது மேலும் சட்டசிக்கலை உருவாக்கும் என்றும் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நிர்பயா தாயார் தொடர்ந்த வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது.