தேசிய செய்திகள்

ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில் + "||" + Passengers & crew are currently quarantined by Japanese authorities mkstalin Dr. S. Jaishankar

ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்

ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்
ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் அளிக்கப்படுகிறது என மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜப்பான் நாட்டை சேர்ந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் கடந்த 9 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் இருக்கும் பயணிகள் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் இருக்கும் 3 ஆயிரத்து 500 பயணிகளில், 60 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த அன்பழகன் என்பவர் அந்த கப்பலில் பணியாற்றி வருகிறார். அவர் தன்னுடைய நண்பருக்கு ‘வாட்ஸ் அப்’ மூலமாக ஒரு தகவலை அனுப்பியுள்ளார். அதில், ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் 100 இந்தியர்கள் பணியாற்றி வருவதாகவும், அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் 100 இந்தியர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு, இந்திய பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் தாயகம் திரும்புவதை உறுதி செய்யவேண்டியது உங்களுடைய கடமையாகும் என வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக பதில் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இரு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் செய்து வருகிறது. 

தற்போது, பயணிகளும், கப்பல் ஊழியர்களும் கண்காணிப்புக் காலத்தில் ஜப்பானியச் சுகாதாரத்துறையினர் வைத்துள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.