தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழு + "||" + Ministry of Health and Family Welfare: On the directions of PM, a high-level Group of Ministers (GOM) constituted to review, Novel Coronavirus (COVID-19) in the countr

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழு

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழு
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
புதுடெல்லி,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் அந்த நாடு மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் தொடங்கி 2 மாதங்களாகிறது. இதனை கட்டுப்படுத்த சீன அரசும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து போராடி வருகின்றன. சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்த கொடிய வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 42,200 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த கொரோனா வைரசுக்கு, உலக சுகாதார அமைப்பு 'கோவிட் - 19' என அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்துள்ளது.

சீனாவில் துவங்கி ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

அதேபோல், ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இந்தநிலையில்  பாங்காக்கில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மூலம் டெல்லி திரும்பிய ஒருவருக்கும், கொல்கட்டாவை சேர்ந்த 2 பேருக்கும்கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா  வைரஸ் குறித்து கண்காணிக்க உயர்மட்டகுழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு, ஆய்வு போன்ற பணிகளை உயர்மட்ட குழு மேற்கொள்ளும் என தெரிகிறது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் படி இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.