உலக செய்திகள்

இந்தியா வர ஆர்வமாக இருக்கிறேன் - டிரம்ப் மனைவி உற்சாகம் + "||" + Thank you @narendramodi for the kind invitation Looking forward to visiting Ahmedabad & New Dehli later this month Melania Trump ‏

இந்தியா வர ஆர்வமாக இருக்கிறேன் - டிரம்ப் மனைவி உற்சாகம்

இந்தியா வர ஆர்வமாக இருக்கிறேன் -  டிரம்ப் மனைவி உற்சாகம்
இந்தியா வருவதில் மிக ஆர்வமாக இருக்கிறேன் என அமெரிக்க அதிபர் மனைவி மெலனியா டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தன்னுடைய மனைவி மெலனியாவுடன், வருகிற 24 மற்றும் 25–ந் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர்களது வருகை சிறப்பான ஒன்று என பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருந்தார்.

இதற்கு டிரம்ப் மனைவி மெலனியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–

இந்தியாவுக்கு வருமாறு அன்பான அழைப்பு விடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. இம்மாதம் இந்தியாவில் ஆமதாபாத் மற்றும் டெல்லிக்கு செல்வதில் ஆர்வமாக இருக்கிறேன். இந்த பயணத்தையொட்டி, ஜனாதிபதி டிரம்பும், நானும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா–அமெரிக்கா இடையிலான நெருக்கமான உறவை கொண்டாட இது நல்ல தருணம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...