தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை + "||" + PM Narendra Modi: Tributes to the brave martyrs who lost their lives in the gruesome

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு  பிரதமர் மோடி, அமித்ஷா மரியாதை
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில்,  40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இந்த கொடூர தாக்குதல் தாக்குதல் நடைபெற்றதன் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

வீரர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூர்ந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “  கடந்த ஆண்டு நடைபெற்ற கொடூரமான புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை  செலுத்துகிறேன்.  நாட்டை பாதுகாக்கும் சேவையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்கள் போற்றத்தக்கவர்கள். வீரர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறவாது” என்று தெரிவித்துள்ளார். 

அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், ” புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. "பசுமை பொருளாதாரத்தை" மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் -பிரதமர் மோடி
சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை ஆற்றும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
2. பிரதமர் மோடி நாளை வாரணாசி பயணம் ; 30 -க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி, தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு நாளை செல்கிறார்.
3. புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? ராகுல் காந்தி கேள்வி
புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.
5. பிரம்பு கொண்டு அடிப்பார்கள் என்ற ராகுல்காந்திக்கு ... அசாம் கூட்டத்தில் மீண்டும் பதில் அளித்த மோடி
”மக்கள் என் மீது அன்பு வைத்து என்னை காப்பார்கள்” என 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிரம்பு கொண்டு அடிப்பார்கள் என்ற கருத்துக்கு பதில் அளித்தார்.