மாநில செய்திகள்

2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்பு + "||" + In fiscal year 2020-21 Debt of Tamil Nadu 4,56,660 crore Has been announced in the budget.

2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்பு

2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை... தமிழக அரசின் கடன் விவரம் வருமாறு:-
சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையியில்  2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்  என பட்ஜெட்டில் அறிவிக்கபட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது 2,000 கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் சுமை தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்   ரூ.4,56,660 கோடியாக   கோடியாக அதிகரித்துள்ளது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த 1984-85-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 2,129 கோடி ரூபாயாக இருந்தது. கருணாநிதி ஆட்சியில் இருந்து விலகிய 2000 - 01-ம் நிதியாண்டில் 28,685 கோடி ரூபாய் தமிழக அரசின் கடனாக இருந்தது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்து விலகிய 2006-ம் ஆண்டு கடன் சுமை 57,457 கோடியாக அதிகரித்தது. பின்னர், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் போது அரசின் கடன்சுமை 101439 கோடியாக உயர்ந்தது.

2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக இருந்தது. 2013-14-ம் நிதியாண்டில் 1,40,041 கோடியாக இருந்தது. 2014-15-ம் நிதியாண்டில் 1,95,290 கோடியாக இருந்தது. 2015-16-ம் நிதியாண்டில் 2,11,483 கோடியாக இருந்தது.

இந்நிலையில், 2016 -17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 2,52,431 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2017 - 18-ம் நிதியாண்டில் 3 லட்சத்து 14,366 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2018 - 19 ஆம் நிதியாண்டில் 3,55,844 கோடி ரூபாயாக உயர்து கடந்த 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக இருந்தது. 2020 - 21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு ரூ.4,56,660  கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக பட்ஜெட்: பொது மக்கள் வரவேற்பும் - எதிர்ப்பும்
தமிழக பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சிலர் பட்ஜெட்டை வரவேற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.
2. கவர்ச்சிகரமான அறிவிப்புகள், தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது - தொல்.திருமாவளவன் பேட்டி
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொண்ட தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
3. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது- தமிழக நிதித்துறை செயலர்
2019-20 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது என தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
4. தமிழக பட்ஜெட் 2020-21- எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு
2020-21 தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம் வருமாறு:-
5. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது