மாநில செய்திகள்

மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ. 563 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் + "||" + To promote tourism in Mamallapuram Rs. 563 crores special package scheme

மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ. 563 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ. 563 கோடியில்  சிறப்புத் தொகுப்புத் திட்டம்
மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். 

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு!

* இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு!

* தூத்துக்குடி தொழில்பூங்காவின் நீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் சுத்திகரிப்பு ஆலை  அமைக்க ரூ.634 கோடி ஒதுக்கீடு! 

* நடப்பாண்டில் 10,276 சீருடைபணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

* இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்திற்கு  ரூ.218 கோடி ஒதுக்கீடு!

* அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனைவரி வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் எனவும், மது வகைகள் மீதான விற்பனை வரியும் சீராக வளர்ச்சி அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

* சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டு உள்ளவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள்களை பெறும் திட்டம் தொடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது குறித்து அதிகாரிகள் கூட்டத்தில் விவாதித்த விவரங்கள் என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது குறித்து அதிகாரிகள் குழு கூட்டத்தில் விவாதித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. மாமல்லபுரம் முகுந்தநாயனார் கோவிலில் சாலை சீரமைக்கும் பணி தீவிரம் தொல்லியல் துறை நடவடிக்கை
மாமல்லபுரம் முகுந்தநாயனார் கோவிலில் சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
3. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கண்காணிப்பு கேமராக்கள்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
4. பாரம்பரியச் சின்னங்கள் : சிற்ப நகரம் மாமல்லபுரம்
சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மாமல்லபுரம் எனப்படும் மகாபலிபுரம். இது பல்லவர்களின் முதன்மை துறைமுக நகரமாகவும், இரண்டாவது தலைநகரமாகவும் விளங்கிய பழம் பெருமை மிக்க நகரமாகும்.
5. மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி: மத்திய மந்திரி பிரகலாத்சிங் அறிவிப்பு
மாமல்லபுரம் உள்ளிட்ட 17 முக்கிய சுற்றுலா தலங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத்சிங் கூறினார்.