மாநில செய்திகள்

தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்-ஓ.பன்னீர்செல்வம் + "||" + Lemon Center at Tenkasi, Chilli Center at Thoothukudi - O. Pannirselvam

தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்-ஓ.பன்னீர்செல்வம்

தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்-ஓ.பன்னீர்செல்வம்
தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கபட்டு உள்ளது.
சென்னை

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்தார்.

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை!

* சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3%ல் இருந்து 5%ஆக உயர்த்தப்படும் 

* தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்

* குடியிருப்பு வாடகை ஒப்பந்தங்களுக்கு முத்திரைத் தாளுக்கான வரி 1%ல் இருந்து 0.25% வரை குறைப்பு.

* சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

* தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், கடன் உத்தரவாத நிதிக்குழும திட்டத்தின்கீழ் வட்டி மானியம் உயர்வு.

* அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்துறையின் தேவைக்கேற்ப புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தம்.

* அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப் பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை. அம்மா உணவகத் திட்டத்தை செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்.