மாநில செய்திகள்

தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை + "||" + Devi announces victory at Sankarapuram Gram Panchayat Madras High Court orders interim injunction

தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி, பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இதையடுத்து தேர்தல் முடிவை எதிர்த்து தேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன்பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பிரியதர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் முதலில் அறிவிக்கப்பட்ட  காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி வெற்றி பெற்றது செல்லும் என்றும், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேவி வெற்றி பெற்றதை எதிர்த்து பிரியதர்சினி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவி வெற்றி பெற்றதாக ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், பஞ்சாயத்து தலைவராக பதவியேற்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.