மாநில செய்திகள்

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது- தமிழக நிதித்துறை செயலர் + "||" + Tasmac Brewery 30 thousand crore in revenue Is available Finance Secretary of Tamil Nadu

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது- தமிழக நிதித்துறை செயலர்

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது- தமிழக நிதித்துறை செயலர்
2019-20 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது என தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
சென்னை

தமிழக  நிதித்துறை செயலர் கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி நெருக்கடி இருந்தாலும், வளர்ச்சியை நோக்கி தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாட்டில் அதிக நிதி வழங்குவது தமிழகம்தான்.

பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட 26 சத்வீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சாலைகள், பாசன வசதி, மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய்ப்பட்டு உள்ளது

மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடுரூ.7,586 கோடி குறைந்துள்ளது.  வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை சாதகமான நிலை அடையும். கூடுதலாக 35,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக பட்ஜெட்: பொது மக்கள் வரவேற்பும் - எதிர்ப்பும்
தமிழக பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சிலர் பட்ஜெட்டை வரவேற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.
2. கவர்ச்சிகரமான அறிவிப்புகள், தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது - தொல்.திருமாவளவன் பேட்டி
கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொண்ட தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
3. தமிழக பட்ஜெட் 2020-21- எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு
2020-21 தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம் வருமாறு:-
4. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது
5. பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.